காஷ்மீர் பற்றி அவதூறாக வீடியோ பாக்., அதிபருக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ்
ஜம்மு-காஷ்மீரில் நிலவரம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் டுவிட்டரில் வீடியோ பதிவிட்டதற்காக, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்விக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு காட்டி வருகிறது. இந்தப் பிரச்னையை சர்வதேச விவகாரமாக்கவும் பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்டது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் பாகிஸ்தான் முறையிட்டு பார்த்தது.ஆனால் சீனா தவிர, இந்த விவகாரத்தில் தலையிட அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வேறு நாடுகள் மறுப்பு தெரிவித்துவிட்டன.
ஆனாலும் பாகிஸ்தான் விடாப்பிடியாக இந்தப் பிரச்னையில் மூக்கை நுழைப்பதை நிறுத்தவில்லை. தொடர்ந்து அவதூறு பரப்புவதை அந்நாட்டு அதிபர், பிரதமர், அமைச்சர்கள் என பலரும் வாடிக்கையாக்கி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி நேற்று டுவிட்டரில் பதிவிட்ட ஒரு வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிராக காஷ்மீரில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெறுவது போன்ற ஒரு வீடியோவை, ஆரிப் அல்வி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். இந்தப்பதிவு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாகக் கூறி டுவிட்டர் நிறுவனம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் சிரீன் மஸாரி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன் டுவிட்டர் நிறுவனத்தின் நோட்டீஸ் தவறான எடுத்துக்காட்டாகவும், கேலிக்குறியதாகவும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது மேலும் சர்ச்சையாகியுள்ளது.
காஷ்மீர் உரிமைகள் மறுப்புக்கு பதிலடிதான் என் ராஜினாமா; இளம் ஐ.ஏ.எஸ். கோபிநாதன் பேட்டி