ஸ்ருதி ஹாசனை தொடர்ந்து இலியானாவுக்கும் இப்படி ஆயிடுச்சே!
நடிகை இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் பிரேக் ஆகியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கேடி, நண்பன் என இரு தமிழ் படங்களில் நடித்த இலியானா, டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பல முக்கியமான படங்களில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில், நடிகை ஸ்ருதி ஹாசனுக்கும் அவரது காதலருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரேக் ஆப் ஆன விஷயம் கோலிவுட்டில் வைரலானது. அதுபோலவே தற்போது இலியானாவுக்கும் நிகழ்ந்துள்ளது.
இலியானா, ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூவ் நிபோனை காதலித்து வந்தார்.
இருவரும் நெருக்கமாக இருப்பது போன்றும் முத்தங்களை பரிமாறிக் கொள்வது போன்றும் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வந்தார்.
ஆண்ட்ரூவும் இலியானா செல்லும் ஷூட்டிங் ஸ்பாட் இடங்களுக்கு அவருடன் சேர்ந்து செல்வதாகவே சுற்றி வந்தார்.
இப்படி சந்தோஷமாக இருந்த காதல் வாழ்க்கை தற்போது திடீரென முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு ஆதாரமாக இருவரும் அவர்களது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை டெலிட் செய்துள்ளனர்.
மேலும், இது பிரேக் தான் என்பதை உணர்த்தும் விதமாக இலியானா பதிவிட்டுள்ள ஒரு அறிக்கையில், சில விஷயங்களை சமரசம் செய்து கொண்டால் தான் உறவு அல்லது காதல் விஷயங்களை இங்கு தொடர முடியும் என்ற அர்த்தத்தில் பதிவிட்டு இருந்தார்.
கோமாளி ’ஹாய் சொன்னா போதும்’ பாடல் வீடியோ ரிலீஸ்!