கூகுள் நெஸ்ட் ஹப் வாங்கினால் மி செக்யூரிட் காமிரா ஃப்ரீ!
கூகுள் அசிஸ்டெண்ட் உதவியுடன் வீட்டிலுள்ள விளக்குகள், கண்காணிப்பு காமிராக்கள், குளிரூட்டும் சாதனங்கள் (ஏ.சி). மற்றும் தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சாதனத்தை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஏழு அங்குல திரை கொண்ட இதன் மூலம் ஸோமி, சிஸ்கா, ஆக்டேர், எல்ஜி, ஈலைட், பிலிப்ஸ், டிபி-லிங்க் உள்பட 3,500 நிறுவனங்களின் 20 கோடி சாதனங்களை கட்டுப்படுத்த இயலும். கூகுள் நிறுவனம் 'கானா' (Gaana) நிறுவனத்துடன் இணைந்து தன் பயனர்கள் கட்டணமின்றி இசை கேட்பதற்கான வசதியை செய்துள்ளது.
யூடியூப் மியூஸிக், சாவ்ன் (Saavn), ஸ்போட்டிஃபை மற்றும் வின்க் மியூஸிக் (Wynk Music) ஆகியவற்றிலிருந்து இசையையும், என்டிடிவி ஃபுட், அர்ச்சனாஸ் கிச் மற்றும் டர்லடால்.காம் ஆகிய தளங்களிலிருந்து சமையல் குறிப்புகளையும் கூகுள் நெஸ்ட் ஹப் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்தியா டுடே, என்டிடிவி, ஸூம் ஆகிய தளங்களிலிருந்து செய்திகளை அறிந்துகொள்ளமுடியும்.
அறையிலுள்ள வெளிச்சத்திற்கேற்ப திரையின் வெளிச்ச அளவை தானியங்கி முறையில் கட்டுப்படுத்தத்தக்க வசதி கொண்ட இச்சாதனத்தில் நாம் எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும், எப்படிப்பட்ட தளங்களை பார்க்கலாம் என்ற மட்டுறுத்தல்களை செய்யலாம். இதன் மூலம் சிறுபிள்ளைகள் பயனுள்ள தளங்களை மட்டும் பார்க்கும்படியான கட்டுப்பாடுகளை செய்ய முடியும்.
அமேசானின் எக்கோ ஷோ 5 சாதனத்திற்கு இது சரியான போட்டியாக விளங்கும் என்று கருதப்படுகிறது. அமேசான் எக்கோ ஷோ, காமிராவை கொண்டது. ஆனால், பயனர்கள் பயமின்றி படுக்கையறையில் கூட பயன்படுத்தத்தக்க வகையில் இதில் காமிரா பொருத்தப்படவில்லை என்று கூகுள் அலுவலர் கூறியுள்ளார். ஆனால் கூகுள் நெஸ்ட் ஹப் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரைக்கும் ரூ.1,799 மதிப்புள்ள மி செக்யூரிட்டி காமிரா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.9,999/- விலையில் கூகுள் நெஸ்ட் ஹப் சாதனத்தை வாங்கலாம்.
ஃப்ளிப்கார்ட் மற்றும் டாடா கிளிக் (Tata CliQ) ஆகிய தளங்களில் இச்சலுகையுடன் கூகுள் நெஸ்ட் ஹப் சாதனத்திற்கு ஆர்டர் செய்யலாம். குரோமா (Croma) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) தளங்கள் மூலமும் வாங்கலாம்.
சூப்பர் செல்ஃபி உள்பட 85 செயலிகளை அகற்றியது கூகுள்