காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் திடீர் பல்டி ஏன்?

காஷ்மீ்ர் விவகாரத்தில் ராகுல்காந்தி திடீரென பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து பல்டி அடித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவை ஆக.5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால், முன்கூட்டியே முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு இன்னமும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம், காஷ்மீருக்கு ராகுல் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் சென்ற போது அவர்கள் ஸ்ரீநகர் விமானநிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது, ராகுல் காந்தி, ‘‘காஷ்மீர் மக்களின் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் 20 நாட்களாக பறிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள முரட்டுத்தனமான அடக்குமுறைகளை எதிர்க்கட்சித் தலைவர்கள் பார்த்தோம்’’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஆனால், இன்று ராகுல்காந்தி தனது நிலையை மாற்றிக் கொண்டார். தனது ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ‘‘நான் மத்திய அரசின் பல்வேறு முடிவுகளை ஏற்கவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காஷ்மீர் விவகாரம், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. இதில் பாகிஸ்தானோ, வேறு நாடுகளோ தலையிட முடியாது. காஷ்மீரில் வன்முறைச் செயல்கள் நடைபெறுகின்றன. அதற்கு காரணம், அவை பாகிஸ்தான் அரசால் தூண்டி விடப்படுகிறது. உலக அளவில் பயரங்கவாதச் செயல்களை ஆதரிக்கும் முக்கியமான நாடாக பாகிஸ்தான் இருக்கிறது’’ என்று பாகிஸ்தானை கடுமையாக சாடியிருந்தார்.

இதற்கு காரணம், காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஷிரீன் மசாரி, 18 ஐ.நா. சிறப்பு ஆணையர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ராகுல் காந்தியின் கருத்துக்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீரில் மக்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டிருப்பதாகவும், வன்முறைச் சம்பவங்கள் நடப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போன்ற இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகள் ஒப்புக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

இதனால்தான், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான் என்று ராகுல் கடுமையாக விமர்சித்திருக்கிறார். மேலும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவும், பாகிஸ்தானின் செயலை கடுமையாக கண்டித்துள்ளார். ‘‘பாகிஸ்தான் சர்வதேச நாடுகளின் மத்தியில் சொல்லும் பொய்களுக்கு ராகுல்காந்தியை மேற்கோள் காட்டியிருப்பது விஷமத்தனமானது. இன்றைக்கும் பயங்கரவாதத்தை பாகிஸ்தானின் அரசும், ராணுவமும்தான் தூண்டி விடுகின்றன. சுதந்திரமடைந்த போது 25 ஆயிரம் முஸ்லிம்களை பாகிஸ்தான் ராணுவம் கொன்று குவித்தது. அதற்்கு இன்னும் பாகிஸ்தான் விளக்கம் அளிக்கவில்லை’’ என்று கூறியிருக்கிறார். ேமலும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்ைகக ைளயும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

காஷ்மீர் உரிமைகள் மறுப்புக்கு பதிலடிதான் என் ராஜினாமா; இளம் ஐ.ஏ.எஸ். கோபிநாதன் பேட்டி

More News >>