அணுகுண்டா? அணு உலையா? இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு டிரைலர்!

தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

பா. ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக உருவாகியுள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தை இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார்.

தினேஷ், கயல் ஆனந்தி, ரித்விகா என பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின், மையக்கரு இரண்டாம் உலகப்போரின் போது வெடிக்காமல் பல இடங்களில் ஒதுங்கியுள்ள ஒரு குண்டு நம் ஊரிலும் ஒதுங்குவது போலவும், அது வெடிக்காமல் இருக்க ஒரு காய்லங்கடைக்காரன் போராடுவது போல உருவாக்கப்பட்டுள்ளது.

அணு குண்டு வெடித்தால் ஐநூறு வருஷத்துக்கு ஒரு புல் பூண்டு கூட முளைக்காது என நாயகன் தினேஷ் பேசும் வசனங்களில் அணு உலையின் ஆபத்தை சித்தரிப்பது போலவே படம் உருவாக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

உலகின் பல நாடுகளில் இரண்டாம் உலகப்போரின் போது வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

அந்த செய்தியை சமகால சமூக அரசியலோடு சேர்த்து இயக்கியுள்ள படத்தை ரஞ்சித் தயாரித்துள்ளது மேலும், அணு உலை குறித்த எச்சரிக்கை மணியை படத்தின் வாயிலாக ஒலிக்கச் செய்ய அவர்கள் எடுக்கும் முயற்சியாகவே தெரிகிறது.

விரைவில் இந்த படமும் திரைக்கு வருகிறது. விசாரணை படத்திற்கு பிறகு தினேஷுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த இந்த படம் உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் காட்டுத்தீயை அணைக்க 36 கோடி ரூபாய் நிதியளித்த டிகாப்ரியோ!

More News >>