பெங்களூரு மருத்துவமனை பணியாளர்களுடன் ரஜினி உற்சாக செல்பி வைரலாகும் புகைப்படங்கள்
பெங்களூரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அண்ணனை பார்க்கச் சென்ற ரஜினி, அங்கிருந்த டாக்டர்கள், நர்ஸ் மற்றும் பணியாள்களுடன் உற்சாகமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வளங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதனால் நடிகர் ரஜினிகாந்த சில நாட்களாக பெங்களூருவில் முகாமிட்டுள்ளார்.
இதற்கிடையில் அவருடைய அண்ணன் சத்தியநாராயணா, சமீபத்தில் மூட்டு அறுவை சிகிச்சை செய்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்ணனைப் பார்த்து நலம் விசாரிக்க ரஜினி நேற்று மருத்துவமனைக்குச் சென்றார்.
மருத்துவமனைக்கு ரஜனி வருகை தந்திருப்பதை அறிந்தவுடன் அங்குள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் பணியாளர்கள் அவரைச் சந்திக்க ஆர்வத்துடன் குவிந்தனர். ரஜினியின் கைகளைப் பிடித்து போட்டி போட்டு உற்சாகமாக கை குலுக்கிய அனைவரும் ரஜினியுடன் போட்டோ எடுக்கவும் செல்பி எடுக்கவும் விருப்பம் தெரிவித்தனர்.
இதற்கு சம்மதித்த ரஜினியும் அங்குள்ளவர்களுடன் சிரித்தபடியே விதவிதமான கெட்டப்புடன் எடுத்துக்கொண்ட ஏராளமான புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் விறுவிறுவென வைரலாகி வருகிறது.
அதிமுகவை கைப்பற்றப் போகிறாரா ரஜினி?