அஜித்துக்கு கடவுள் பக்தி அதிகம் – சீக்ரெட்டை வெளியிட்ட அபிராமி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெளியேறியுள்ள நடிகை அபிராமி நடிகர் அஜித்துக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம் என்ற சீக்ரெட்டை வெளியிட்டுள்ளார்.
தல அஜித் என்றாலே தனி ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு உண்டு. பல நடிகர்களே மேடையில் கை தட்டல் வாங்க தல என்ற ஒற்றை வார்த்தையை உபயோகப்படுத்துவர்.
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஃபமீதா பானுவாக நடித்தவர் நடிகை அபிராமி. இவர் ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்று சமீபத்தில் வெளியேறியவர்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில் அஜித்தின் ஆன்மிக சிந்தனை மற்றும் பக்தி குறித்தும் கூறியுள்ளார். மேலும், அஜித்தின் எளிமை மற்றும் அவரது அரவணைப்பு குணங்கள் குறித்தும் கூறியுள்ளார். அந்த பேட்டி அஜித் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அஜித் குறித்த ஒவ்வொரு அப்டேட்களையும் பின்பற்றும் அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரது இந்த ஆன்மிக பக்தி குறித்த தகவலை பின்பற்றுவார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.