மலையாள நடிகை பிரகாஷ் வாரியருக்கு ஆதரவளிக்கும் முதலமைச்சர்!

மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதற்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்திற்காக எடுக்கபட்ட ‘மாணிக்ய மலரேயா பூவி’ என்ற பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டது. ஒமர் லுலு இயக்கத்தில் ஒரு அடார் லவ் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

இந்த பாடலை விட இந்த பாடலில் நடித்து உள்ள பிரியா பிரகாஷ் வாரியரின் கண் அசைவுகள் சமூக வலைதளங்களில் கண்ணாபிண்ணாவென வைரல் ஆனது. இதனால் அவரது இன்ஸ்டாகிராம் வீடியோ அப்லோடு செய்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்தனர்.

கேரளா மட்டும் இன்றி நாடு முழுவதும் ஒரே நாளில் பிரியா வாரியர் பிரபலமாகிவிட்டார். அதேபோல, தற்போது வரை 30 லட்சம் பேர் பின் தொடர்பவர்களாக உள்ளார். இந்நிலையில், தற்போது கூகுள் தேடலில் பிரபலமாகி உள்ளார்

இதற்கிடையில், பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஹைதராபாத் போலீஸில் முஸ்லிம் அமைப்புகள் அளித்த புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘மாணிக்ய மலரேயா பூவி’ இறைத்தூதர் நபிகள் நாயகத்தை தொடர்புபடுத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரியா பிரகாஷ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள பினராயி விஜயன், “சமூகத்தின் எந்த பகுதியாக இருந்தால் சகிப்புத்தன்மை இல்லாததை ஏற்றக்கொள்ள முடியாது’ என்றார்.

மேலும், “இந்த பாடல் பெரிய விவாதத்தையும், சர்ச்சையையும் உண்டாக்கியுள்ளது. சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்த பாடல் இறைவனை பழிப்பதாக கூறிம், பிரியா பிரகாஷூக்கு எதிராக ஹைதராபாத் காவல் நிலையத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இது திறந்த சிந்தனை மற்றும் கலை வெளிப்பாடுகளுக்கு எதிரான சகிப்புத்தன்மை இன்மை என்பது தெளிவான தெரிகிறது” என்று கூறியுள்ளார். ஒரு பாடல் சர்ச்சைக்கு மாநில முதல்வர் கருத்து தெரிவித்துள்ளதோடு, கலைஞர்களுக்கு ஆதரவளித்துள்ளது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

More News >>