அடுத்த ஜிமெயிலுக்கு தாவலாம்: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வசதி!
உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்கு உள்ளதா? ஸ்வைப் டூ ஸ்விட்ச் (தடவி தாவல்) முறைப்படி, ஒன்றுக்கு மேற்பட்ட தங்கள் ஜிமெயில் கணக்குகளை பார்க்கும் வசதியை ஆண்ட்ராய்டு பயனர்கள் தற்போது உபயோகப்படுத்தலாம். கடந்த ஆண்டு ஐஓஎஸ் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இப்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கூகுள் பட்டியில் வலப்பக்கம் மேல் மூலையில் உள்ள தன்விவர படத்தின் (அவதார்) மீது ஸ்வைப் செய்தால், முதலில் அடுத்த மின்னஞ்சல் கணக்குக்கான தன்விவரபடம் மாறும். படம் வைக்காதவர்களுக்கு பெயரின் முதல் எழுத்து தெரியும். அதன் பின்பு அந்த மின்னஞ்சல் கணக்குக்கான இன்பாக்ஸ் தெரியும்.
ஜிமெயிலுக்கு மட்டுமன்றி, கூகுள் கான்டாக்ட்ஸ், கூகுள் மேப்ஸ், கூகுள் டிரைவ் ஆகிய செயலிகளிலும் இந்த வசதி கிடைக்கிறது. கூகுள் லென்ஸ் என்ற கருவியை கொண்டு, தங்கள் கூகுள் புகைப்படங்களிலுள்ள வார்த்தையை பயன்படுத்தி படங்களை தேடக்கூடிய புதிய வசதியையும் கூகுள் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.