சுட.. சுட.. சிக்கன் பிரைட் ரைஸ்.. சூப்பர் ரெசிபி
சுட.. சுட.. சிக்கன் பிரைட் ரைஸ்.. சூப்பர் ரெசிபி.. எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..
தேவையான பொருட்கள்
பொருள்அளவு
பாசுமதி அரிசி 2 கப்வெங்காயம் 2இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்சோயா சாஸ் அரை டீஸ்பூன்எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் கால் கிலோவெங்காய தாள் கால் கப் முட்டை கோஸ் கால் கப்கேரட் கால் கப்பீன்ஸ் கால் கப்குடை மிளகாய் 1(நறுக்கியது)பச்சை பட்டாணி 1 டேபிள் ஸ்பூன்மக்கா சோளம்1 டேபிள் ஸ்பூன்உப்பு தேவைக்கேற்பமிளகுத் தூள் அரை டீஸ்பூன்சர்க்கரை அரை டீஸ்பூன்பூண்டு பல்3பச்சை மிளகாய் 2முட்டை 1மிளகு தூள் கால் டீஸ்பூன்
செய்முறை
வெங்காயம், முட்டைக் கோஸ், கேரட், குடை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் தண்ணீர் சேர்த்து சாதமாக வடித்து எடுத்து, கிளறிவிட்டு உதிர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெயை போட்டு உருக்கிக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதினையும் சேர்த்து வதக்கவும்.
அதில் சோயா சாஸ் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறிவிடவும்.
வாணலியில் சிறிது வெண்ணெய் போட்டு உருக்கி அதில் சர்க்கரை, நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு வெங்காயம் மற்றும் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
சிக்கன் வெந்ததும், அதனுடன் முட்டை கோஸ், கேரட், மக்கா சோளம், பட்டாணி, வெங்காயத்தாள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். காய்களை நன்றாக வேகவிட வேண்டாம். பாதி வேக வைத்தால் போதுமானது.
பின்னர் அதனுடன் அதில் மிளகுத்தூள், உப்பு, சோயாசாஸ் சேர்த்து கலக்கி, அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி, கலக்கி அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கி, பின்னர் அதை தூளாக உதிர்த்துக் கொள்ளவும். கடைசியாக உதிர்த்து வைத்துள்ள சாதத்தை இதனுடன் சேர்த்து கிளறவும்.