வாவ்! தோனியை மிஞ்சிய கோலியின் கேப்டன்ஷிப்!

இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் என்ற தோனியின் சாதனையை நேற்றைய வெற்றியின் மூலம் கேப்டன் கோலி முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி மேற்கிந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில், கோலி, தலைமையில் விளையாடிய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியை அபாரமாக விளையாடி வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அசத்தியது.

முதல் இன்னிங்ஸை 416 ரன்கள் இந்திய அணி எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேற்கிந்திய அணி 117 ரன்களுக்கு இந்திய பந்து வீச்சாளர்களின் சுழலில் சிக்கி பலியானது.

இரண்டாவது இன்னிங்ஸை 168/4 என்ற நிலையில் இருந்த போதே இந்திய அணி டிக்ளேர் செய்தது. ஆனால், மேற்கிந்திய அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்து கோப்பையை பறிகொடுத்தது.

இந்த வெற்றியின் மூலம் 28 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் என்ற புதிய சாதனையை கோலி படைத்துள்ளார். இதுவரை தோனி தலைமையில் விளையாடிய 60 போட்டிகளில் இந்திய அணி 27 போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருந்தது.

தற்போது, கோலி 48 டெஸ்ட் போட்டிகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தோனியின் சாதனையை அதிவிரைவாக முறியடித்துள்ளார்.

More News >>