தளபதியும் தளபதியும் சந்தித்து கொண்ட அந்த பொழுது! வெறித்தனம்!

அரசியல் தளபதி ஸ்டாலினும் சினிமா தளபதி விஜய்யும் நேற்று மாலை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்ப விழாவில் சந்தித்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மகள் செல்வியின் பேத்தி ஓவியாவுக்கு நேற்று சென்னையில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த குடும்ப விழாவுக்கு குறிப்பிட்ட சிலரையே அழைத்து இருந்தனர். இந்த விழாவுக்கு நடிகர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விழாவுக்கு வந்த நடிகர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அவருடன், சில நிமிடங்கள் கலந்துரையாடினார். பின்னர், துரைமுருகனுடன் விஜய் பேசினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் விஜய்யின் பிகில் திரைப்படத்தில் இருந்து விஜய் பாடிய வெறித்தனம் பாடல் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், விரைவில் விஜய் அரசியலுக்கு வர ரெடியாகி விட்டார் என்ற மீம்ஸ்களும் இந்த புகைப்படம் மற்றும் அந்த பாடலை மாஷ் அப் செய்து சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

More News >>