கோர விபத்தில் சிக்கி புகைப்பட கலைஞர் பலி துணை நடிகர் தவசி படுகாயம்
தேனி அருகே நடந்த கோர விபத்தில் சிக்கிய பிரபல புகைப்பட கலைஞர் சிவா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். துணை நடிகர் தவசி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேனி அருகே உள்ள கோம்பை மலையடிவார பகுதியில் நடைபெற்ற கார் விபத்தில், காரை ஓட்டி வந்த துணை நடிகர் தவசி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் பயணம் செய்த கேமராமேன் சிவா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பாலியாகி உள்ளார்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்து, பின்னர், உறவினர்களுக்கு சொல்லி அனுப்பினர். விஜய், அஜித் மற்றும் மோகன் லால் படங்களில் கேமராமேனாக வேலை செய்துள்ள சிவா, தற்போது சீரியல் ஒன்றில் கேமராமேனாக பணியாற்றி வந்தார். கோம்பை பகுதியில் கடந்த 25 நாட்களாக ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், கேரவனில் செல்லாமல், கருப்பன் குசும்புக்காரன் எனும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் வசனம் பேசும் துணை நடிகர் தவசியுடன் காரில் பயணித்த கேமராமேன் சிவா பரிதாபமாக பலியாகி உள்ளார்.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சிவாவுக்கு 55 வயதாகிறது. மூத்த ஒளிப்பதிவாளர் உயிரிழந்த சம்பவம் கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.