மிரட்டும் மகாமுனி மேக்கிங் வீடியோ!
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி மிரட்டி வருகிறது.
மெளனகுரு படத்தை இயக்கி பலரது பாராட்டுக்களை அள்ளிய இயக்குநர் சாந்தகுமாரின் அடுத்த தரமான படைப்பாக உருவாகியுள்ள மகாமுனி வரும் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகிறது.
நான் கடவுள், அவன் இவன், மதராசபட்டினம், புறம்போக்கு எனும் பொதுவுடமை போன்ற கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ஆர்யா, மீண்டும் அதுபோன்ற ஒரு படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மகாமுனி, இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். யாரையோ ஒருவரை, ஸ்கெட்ச் போட்டு கொலை செய்யும் கொலையாளியாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார்.
ஆனால், அந்த கொலை சாதாரண கொலை அல்ல, அந்த சந்தர்ப்பம் மிகவும் தனித்துவமானது என்பது இயக்குநரின் ஒவ்வொரு ஃபிரேம்களிலும் தெரிகிறது.
வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்திற்கான புரமோஷன் வீடியோவாக மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். தமன் இசையில் மேக்கிங் வீடியோவே மிரள வைக்கிறது.
ஆர்யாவுக்கு இந்த படம் நிச்சயம் பல விருதுகளை அள்ளித்தரும் என நம்பப்படுகிறது. உலக தரத்தில் ஒரு தமிழ் சினிமா என்ற டேக்லைனுடன் இந்த படம் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.