விக்ரம் பிரபு மகனுக்கு விஷ் பண்ணிய விராட் கோலி!
நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வீடியோ மூலம் வாழ்த்து சொல்லி அசத்தியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, கும்கி படம் மூலம் தமிழ் சினிமா ஹீரோவாக அறிமுகமானார்.
தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த விக்ரம் பிரபுவுக்கு, அடுத்தடுத்த படங்கள் சரிவர அமையாமல் போனதால், நல்ல கதையை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், விக்ரம் பிரபுவின் மகன் விராட்டின் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விராட்டின் பிறந்த நாள் குறித்து இணையத்தின் மூலம் அறிந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, தனது பெயர் கொண்ட சிறுவனின் பிறந்த நாளுக்கு கோலி வாழ்த்து சொல்லி வீடியோவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த ட்வீட்டை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள விக்ரம் பிரபு, விராட் கோலிக்கு தங்களது மகிழ்ச்சி மற்றும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.