காப்பான் படமும் ஃபிளாப்பா? டிரைலர் எடிட்டிங்கே சரியில்லையே!
சூர்யாவின் காப்பான் டிரைலர் சற்றுமுன் வெளியானது. ஆனால், அந்த டிரைலர் எடிட்டிங் பழைய தமிழ் சினிமா டிரைலர் எடிட் போல உள்ளது என்றும் மொக்கை எடிட்டிங் என்றும் நெகட்டிவ் கமெண்டுகள் குவிந்து வருகிறது.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படம் வரும் 20ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட படத்தின் டீசர் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், சூர்யாவின் 20வது ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடும் விதத்தில் இன்று அவசர அவசரமாக படத்தின் டிரைலர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
ஆனால், அந்த டிரைலர் டீசர் அளவுக்கு இல்லை என்றும், மேலும், ஒரு பத்து வருடங்களுக்கு முன்னாள் வரும் பட டிரைலர்களில் அனைத்து பாடல்களும் வேண்டுமென்றே திணித்து டிரைலர் உருவாக்கப்படுவது போல இந்த டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிரைலர் இப்படி சொதப்பியதால், சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம் மற்றும் என்ஜிகே படங்கள் ஃபிளாப் ஆனது போல காப்பான் படமும் தோல்வியை சந்திக்குமா என்ற அச்சமும் ரசிகர்களிடையே கிளம்பியுள்ளது.