பிச்சைக்காரனை பீட் செய்ததா சிவப்பு மஞ்சள் பச்சை?
சசி இயக்கத்தில் கடைசியாக வெளியான பிச்சைக்காரன் திரைப்படம், அவரது கேரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், இன்று அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா!
எல்லாருமே சிறு வயது முதல் இப்போது வரை டாம் அண்ட் ஜெர்ரி கதாபாத்திரத்தை ரசிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அதுபோன்ற ஒரு கதை தான் இந்த சிவப்பு மஞ்சள் பச்சை.
நாயகர்கள் சித்தார்த் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இடையே நடக்கும் மோதல்களை சுவாரஸ்ய திரைப்படமாகவும், இளைஞர்களுக்கு தேவையான சாலை போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல் என்ற அட்வைசையும் இயக்குநர் சசி அழகாக வைத்து திரைக்கதையை வடிவமைத்ததற்கே அவரை பாராட்டலாம்.
ஆனால், படம் பிச்சைக்காரன் அளவுக்கு மாஸ் காட்டவில்லை என்று தான் உண்மையை சொல்ல வேண்டியிருக்கு.
அக்கா, தம்பி பாசம் மற்றும் மாமன், மச்சான் உறவை அருமையாக எடுத்துரைக்கும் இந்த படம், இரண்டாம் பாதியில் ஸ்லோ டவுன் ஆவது ரசிகர்களுக்கு சற்றே அலுப்பு தட்டும் விதமாக அமைந்து விடுகிறது.
ஆனபோதும், நல்ல கருத்துள்ள படத்திற்கான வரவேற்பு மற்றும் எமோஷனல் டச்சுகளால் சசி சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து பவுண்டரி விளாசியுள்ளார் என்றே சொல்லலாம்.
அப்பா, அம்மா இல்லாமல் அக்காவின் வளர்ப்பில் வளரும் ஜி.வி. பிரகாஷ், பைக் ரேசில் ஈடுபட, டிராபிக் போலீஸாக உள்ள சித்தார்த், அவரை பிடித்து அவமானப்படுத்த, அடுத்த காட்சியில் அவன் அக்காவின் கணவராக சித்தார்த் வரப்போவதை அறிந்து ஜி.வி. பிரகாஷ் செய்யும் வேலைகள் ரசனையின் உச்சம்.
மொத்தத்தில் இன்று வெளியான படங்களில், மகாமுனி மற்றும் சிவப்பு மஞ்சள் பச்சை டிக்கெட் எடுத்து பார்த்தவர்களை எந்த வகையிலும் பெரிதாக ஏமாற்றாது என்றே கூறலாம்.சினி ரேட்டிங்: 3.5/5.