பாகிஸ்தானில் ரிக்ஷா மீது லாரி மோதி விபத்து – 7 மாணவர்கள் பலி
பாகிஸ்தானில் ரிக்ஷா ஒன்றின் மீது கற்களை ஏற்றிவந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதி ஏற்படுத்திய விபத்தில் 7 பள்ளி மாணவர்கள் மற்றும் ரிக்ஷா ஓட்டுநர் என 8 பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு சொந்தமான பஞ்சாப் மாகாண பகுதியில் உள்ள நரோவால் சபர்வாலா தேசில் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ரிக்ஷா மீது, அங்கு குவாரியில் சலவை கற்களை ஏற்றி வந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் சென்று கொண்டிருந்த ரிக்ஷா மீது மோதியது.
இதனால், ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி ரிக்ஷாவில் இருந்த 7 மாணவர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக பலியான சோக சம்பவம் பாகிஸ்தான் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். லாரி டிரைவர் மற்றும் ஓனர்கள் குறித்த விசாரணையும் நடைபெற்று வருகின்றது.