ஹாலிவுட்டில் நுழையும் நிவேதா பெத்துராஜ்!
நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை களத்தோடு, ஹாலிவுட்டில் அறிமுக இயக்குனர் இயக்கும் ஒரு புது படத்தில் நடிக்கவுள்ளார் தமிழ் நடிகை நிவேதா பெத்துராஜ்.
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அந்த படத்திற்கு பின்பு டிக் டிக் டிக், திமிருபுடுச்சவன் போன்ற படங்களில் நடித்தார்.
மேலும் அவரது நடிப்பில் பொன்.மாணிக்கவேல், சங்கத்தமிழன், ஜகஜ்ஜால கில்லாடி போன்ற படங்கள் ரிலீசாகவுள்ளது. முன்னணி நடிகைகளுடன் நடிப்பில் போட்டி போட்டு நடிக்கும் நிவேதா பெத்துராஜுக்கு, பல முன்னணி நடிகைகளுக்கு கிட்டாத வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.
கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு செல்லும் நடிகைகள் குறைந்த வண்ணமே உள்ளனர். அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார் நிவேதா. ஹாலிவுட்டில் அறிமுக இயக்குனர் இயக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் தற்போது நிவேதா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் இருப்பதாகவும் அதில் நடிக்க நிவேதா பெத்துராஜ் தயாராகிவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
நயந்தாரா, திரிஷா, ஜோதிகா போன்ற நடிகைகள் பல ஹீரோக்களுடன் நடித்தாலும் கதாநாயகியை வெளிச்சப்படுத்தி காட்டும் பல படங்களில் நடித்து வெற்றியும் ஈட்டி வருகிறார்கள். அதுபோல அவர்கள் வழியை பின்பற்றும் நிவேதா பெத்துராஜ், அதிலும் ஒருபடி மேலே சென்று ஹாலிவுட்டில் லீடு ரோலில் நடிக்க உள்ளது பெருமைக்குரிய விஷயம் தான்.