விஜய் டிவி ராமருக்கு கிடைத்த சீதை!
அறிமுக இயக்குனர் மணி ராம் இயக்கும் ஒரு புதிய படத்தில் ராமர் ஹீரோவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக சஞ்சனா கல்ராணி நடிக்கிறார்.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மணி ராம் தனது திரைப்பயணத்தை தொடங்கும் வகையில் தமிழ் சினிமாவில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக முதன் முதலில் அறிமுகமாகிறார் காமெடி நடிகர் ராமர். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சஞ்சனா கல்ராணி நடிக்கவுள்ளார்.
காமெடி, கற்பனை, திரில்லர் கலந்த இந்த படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். தனது தனித்திறமை மூலம் பிரபலமானவர் ராமர். விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் வரும் சிரிச்சா போச்சியின் மூலம் பலர் மனதில் இடம்பிடித்தவர்.
ஒரு ஷோவில் நடித்த இவரது திறமை மூலம் இவர் பெயரை வைத்தே ராமர் வீடு என்ற புதிய ஷோ ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு மனிதனுக்கு அழகைவிட திறமை இருந்தால் போதும் எந்த உயரத்தையும் அடையலாம் என்று எடுத்துக்காட்டாக இருக்கிறார் ராமர்.
இந்த படத்தில் உடன் நடிக்கும் நடிகர்களை தேர்வு செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.