பொன்னியின் செல்வனுக்காக புதுமை செய்ய உள்ள வைரமுத்து!
பொன்னியின் செல்வன் படம் வரும் டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும் அந்த படத்தில் இடம்பெறும் பாடல்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன், பல காலங்களாக படமாக்கும் முயற்சியில் முயன்று தோல்வியுற்று, தற்போது, இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ளது உறுதியாகியுள்ளது.
வரும் டிசம்பர் மாதத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு துவங்கும் என்றும், தீபாவளிக்குள் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பொன்னியின் செல்வன் நாவல் என்பதால், அதில் பல பாடல்கள் இடம்பெறும் என்பதாலும், இந்த படத்திற்கான அனைத்து பாடல்களையும் எழுதும் பொறுப்பு கவிஞர் வைரமுத்துவிடம் வந்துள்ளது.
பழைய பாடல்கள் போல இருந்தால், இன்றைய கால இளைஞர்கள் பெரிதும் ரசிக்க மாட்டார்கள் என்பதற்காக, ஏ.ஆர். ரஹ்மான் இசையில், புதுமை நிறைந்த பாடல்களை எழுத வைரமுத்து திட்டமிட்டுள்ளாராம். மேலும், 12 பாடல்கள் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்காக வைரமுத்து எழுதவுள்ளார் என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.