4வது முறையாக சாம்பியன்ஷிப் – அமெரிக்க ஓபன் டென்னிஸில் நடால் சாதனை!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரரை வீழ்த்தி நட்சத்திர வீரர் நடால் கோப்பையை கைப்பற்றினார்.

அமெரிக்காவின் உலக பிரபலமான கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஸ்பெயின் வீரர் நடால் 4வது முறையாக ஃபைனலில் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளார். நடாலுக்கு உலகளவிலான விளையாட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இறுதிப்போட்டியில் நடாலுக்கு மிகவும் சிம்மசொப்பனமாக ரஷ்ய வீரர் மெத்வதேவ் விளையாடி வந்தார். ஆனால், இறுதியில் நடைபெற்ற த்ரில் போட்டியில் நடால் மெத்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தன் வசப்படுத்தினார்.

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த கடுமையான யுத்தத்தில் நடால், 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி தனது 4வது வெற்றியை பதிவு செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நடால் கைப்பற்றியிருக்கிறார். இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றால், ரோஜர் பெடரின் உலக சாதனையை (20 கிராண்ட்ஸ்லாம்) சமன் செய்வார்.

More News >>