94வது பிறந்த நாள்: ஆர்.எம்.வீரப்பனுக்கு ஸ்டாலின் நேரில் வாழ்த்து..

ஆர்.எம்.வீரப்பன் வீட்டிற்கு மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

எம்ஜிஆர் கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் இன்று(செப்.9) 94வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்.எம்.வீரப்பனுடைய வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஸ்டாலினுடன் திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் சென்றிருந்தார்.

எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், அவரது ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் அமைச்சராக பணியாற்றியவர். அப்போதெல்லாம் திமுக தலைவர் கருணாநிதிைய கடுைமயாக விமர்சித்து வந்தவர். பின்னாளில், ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து சென்று எம்.ஜி.ஆர். கழகத்தை துவக்கினார். அதன்பிறகு, திமுக தலைவர் கருணாநிதியுடன் நட்பு கொண்டார். தொடர்ந்து இன்று வரை திமுக தலைவர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார்.

More News >>