உருவாகிறது துப்பறிவாளன் 2 இசையமைப்பாளர் யார் தெரியுமா?

விஷால் – மிஷ்கின் கூட்டணி துப்பறிவாளன் திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு, விஷால் – மிஷ்கின் கூட்டணியில் உருவான துப்பறிவாளன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மிஷ்கின், தற்போது உதய்நிதி ஸ்டாலினை வைத்து சைக்கோ படத்தை இயக்கி வருகிறார். சைக்கோ படத்தை தொடர்ந்து புதிய படத்தை இயக்கும் முயற்சியிலும் மிஷ்கின் இறங்கியுள்ளார்.சுட்டுபிடிக்க உத்தரவு, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த மிஷ்கின், தற்போது மீண்டும் இயக்குநர் மிஷ்கினை தட்டி எழுப்பியுள்ளார்.விரைவில் விஷாலை வைத்து துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளார். மேலும், இந்த படத்தில் மிஷ்கினின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜா இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.முதல் பாகத்தில் நடித்திருந்த அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, பிரசன்னா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இந்த படத்திலும் தொடர்கிறார்களா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

More News >>