காவிரி நதிநீர் தீர்ப்புக்கு ஆதரவாக விஜயகாந்த் கருத்து

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு தொடர்பாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்குகளின் இறுதிகட்ட தீர்ப்பு நேற்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அறிவித்தனர்.

அதில், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஏற்கனவே அறிவித்திருந்த அளவை விட இந்த தீர்ப்பில் அளவை குறைத்து அறிவிக்கப்பட்டதால், விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் மேற்கொண்டு கூறியதாவது: காவிரி எந்த மாநிலத்துக்கும் சொந்தமில்லை என்று நீதிபதிகள் கூறியது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையே வஞ்சனையை பார்க்க கூடாது. மத்திய அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>