ஆப்பிள் திருவிழா தொடக்கம் புதிய கேஜட்டுகள் அறிமுகம்!

2019ம் ஆண்டிற்கான ஆப்பிள் நிறுவனத்தின் திருவிழா தொடங்கியுள்ளது. இதில், ஆர்கேட் கேமிங், ஐபேட் 2019, ஆப்பிள் டிவி பிளஸ் உள்ளிட்ட புதிய கேஜேட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கிய மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கத்தில், தற்போதைய சி.இ.ஒ டிம் குக், அறிமுக உரையுடன் இந்த ஆப்பிள் திருவிழாவை துவங்கினார்.முதலாவதாக ஆப்பிள் ஆர்கேட் எனப்படும் கேமிங்கான கேஜட் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் அதன் அப்பையும் அறிமுகப்படுத்தினார். அதன் உடனே பல்வேறு புதிய கேம்களையும் டிம் குக் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்த, பெரிய திரையில், அவற்றின் புகைப்படங்கள் மற்றும் செயல் விளக்க வீடியோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

முதல் ஒரு மாதம் இந்த ஆப்பிள் ஆர்கேட் சேவையை இலவசமாக பயன்படுத்தும் வாய்ப்பையும், பின்னர், மாதம் 499 டாலர்கள் சந்தாவில் இதனை பயன்படுத்தும் பிரீமியம் முறையையும் அவர் அவர் அந்த நிகழ்ச்சியில் அறிவித்தார். அதன் பின்னர், ஆப்பிள் டிவி பிளஸ் என்ற சேவையை ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவையுடன் இணைந்து முதல் கட்டமாக 100 நாடுகளுக்கு வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். பின்னர், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 2019ம் ஆண்டிற்கான புதிய ஐபேட் ஒன்றையும் டிம் குக் அறிமுகப்படுத்தினார்.

முந்தைய ஐபேட்களில் இருந்து, இரு மடங்கு வேகமான பிராசஸர் திறன் கொண்டு அதிவேகமாக இந்த புதிய ஐபேட் செயல்படும் என்று அறிவிக்க, இந்த ஐபேடுக்கு பலத்த வரவேற்பு கிளம்பியது. இதன் ஆரம்ப விலை 399 டாலர்களில் இருந்து துவங்குவது கூடுதல் சிறப்பம்சம்.

More News >>