ஊமையாக நடிக்கிறாரா அனுஷ்கா ?
ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் அனுஷ்கா. நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் தமிழ் டைட்டில் அறிவிப்பு.
தெலுங்கிலும், தமிழிலும் முன்னணி நடிகையாக வளம்வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. உடல் எடை அதிகரித்த காரணத்தினால் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. அருந்ததி, பாகமதி, ருத்திரமாதேவி போன்ற படங்களில் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்திருப்பார்.இந்நிலையில் பிட்னஸ் ஒருவரின் உதவியோடு தனது உடல் எடையை ஓரளவு குறைத்துள்ள அவர், சைலன்ஸ் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதால், தமிழ் படத்திற்கு நிசப்தம் என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை ஹேனந்த மதுக்கர் இயக்குகிறார். இந்த படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர். ஷாக்சி என்னும் கதாபாத்திரத்தில் வாய் பேச முடியாத ஒரு ஓவியம் வரையும் பெண்மணியாக இந்த படத்தில் நடித்திருக்கிறார், அனுஷ்கா.நீண்ட நாள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் படம் நடிக்கிறார், அனுஷ்கா. இந்த படம் நல்லவரவேற்பை பெற்றால் மட்டுமே அனுஷ்கா தன் நிலையை தக்கவைத்துக்கொள்ள முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.