டாப் ஹீரோ நடிப்பில் இந்தியில் உருவாகும் கோமாளி!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ள கோமாளி திரைப்படம், இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் படத்திலேயே மிகப்பெரிய சிக்ஸர் அடித்துள்ளார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான கோமாளி திரைப்படம் 25 நாட்களை கடந்து இன்னும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவி 16 வருடங்கள் கோமா நிலையில், இருந்து மீண்டு வந்து தான் இழந்தவற்றையும், 16 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை டிரோல் செய்யும் விதமாகவும், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் மனிதம் மட்டும் மாறுவதில்லை என்ற கிளைமேக்ஸுடன் காமெடி கலந்த கருத்து படமாக கோமாளி இருந்தது.

இதனால், மக்கள் பலரும் இந்த படத்தை ரசித்து திரையரங்குகளுக்கு குடும்பமாக சென்று கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கோமாளி படத்தின் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளதாகவும், அந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட டாப் நடிகர்கள் முதல் ரன்பீர் கபூர் போன்ற இளம் முன்னணி நடிகர்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில், ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் இந்தியில் நடிக்கப்போகும் அந்த நட்சத்திரத்தின் பெயர் அறிவிக்கப்படும் என்பதால், பாலிவுட்டிலும் கோமாளி படத்திற்கு வரவேற்பு வரத் தொடங்கியுள்ளது.

 

 

More News >>