அடேங்கப்பா.... மகனின் ஒலிம்பிக்கை காண 17ஆயிரம் கி.மீட்டர் சைக்கிளில் வந்த பெற்றோர்!

மகனின் ஒலிம்பிக் போட்டியை காண்பதற்காக ஓர் தம்பதியினர், சுவிட்சர்லார்ந்தில் இருந்து, தென் கொரியா வரை ஏறக்குறைய 17ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் நடைபெற்று வருகிறது. இதனால், போட்டியில் பங்கேற்பவர்களின் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் போட்டியை காண்பதற்கு அங்கு படையெடுத்துள்ளனர்.

அதேபோல் சுவிட்சர்லாந்தை சேர்ந்த குய்டோ ஹுவைலர்-ரீட்டா ருட்டிமான் தம்பதிகளின் மகனான மிஸ்சா கெசேர், குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளப்போவதாக கூறி பயிற்சிகளில் ஈடுபட்டு தற்போது பியாங்சாங் தொடரில் கலந்து கொண்டுள்ளார்.

மகனின் பனிச்சறுக்கு சாகசத்தைக் காணும் ஆவலுடன் தென்கொரியா செல்ல விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார் குய்டோ ஹுவீலர். ஆனால் தாடி வைத்ததை காரணம் காட்டி சுங்க அதிகாரிகள் விசா கொடுக்க மறுத்துவிட்டனர்.

இதனால் வருத்தமடைந்த குய்டோ ஹுவைலர்-ரீட்டா ருட்டிமான் தம்பதி தென்கொரியாவிற்கு சைக்கிளில் சென்று மகனின் விளையாட்டை காணமுடிவு செய்தனர்.

இதனையடுத்து, ஜூரிச் முதல் பியாங்சாங் வரையிலான வரைபட தூரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் சைக்கிள் பயணத்தை தொடங்கினர். சுவிட்சர்லாந்து நாட்டின் எல்லை பகுதியான ஓல்டன் நகரில் இருந்து மத்திய ஆசிய நாடுகளில் உள்ள மிக ஆபத்தான 4 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள செங்குத்தான மேடுகளை கடந்து பியாங்சாங் நகரை அடைந்தனர்.

320 நாடுகள் வழியாக ஓராண்டுகள் தொடர்ச்சியாக பயணம் செய்து 17 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தை கடந்து, தங்களது மகனின் பனிச்சறுக்கு சாகச விளையாட்டை கண்டு ரசித்தனர்.

இது குறித்து கூறியுள்ள அவர்கள், “எங்களது மகனை கண்டது பெரிய சந்தோஷத்தை அளித்துள்ளது. இது எங்களுடைய நெடுநாள் கனவு. நாங்கள் அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டோம். இது அற்புதமானது” என்றனர். மேலும், உலகம் முழுதும் சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று வேடிக்கையாக கூறியுள்ளனர்.

More News >>