இந்தியாவுடன் திடீர் போர் வரலாம்.. பாகிஸ்தான் மந்திரி மிரட்டல்..
காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையால், இந்தியாவுடன் திடீர் போர் வரலாம். நிலைமைக்கேற்ப எதுவும் நடக்கலாம் என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெகமூத் குரேஷி மிரட்டல் விடுத்திருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜெனீவாவுக்கு பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெகமூத் குரேஷி வந்தார். கூட்டத்திற்கு இடையே அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையால், இந்தியாவுடன் திடீர் போர் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மோதலால் ஏற்படக்கூடிய விளைவுகளை இருநாடுகளும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையில், எதுவும் நடக்க வாய்ப்பு உள்ளது என்றார்.