பிகில் நடிகையுடன் இணையும் ஜி.வி. பிரகாஷ்!
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா ஒப்பந்தமாகியுள்ளார்.
கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் என்.எஸ்.ராஜராஜன் தயாரிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கும் படத்தின் பூஜை நேற்று ஏ.வி.எம் அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கிறார். மேலும் விஷ்ணு ரங்கசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் தான் மதிமாறன் புகழேந்தி என்பது குறிப்பிடதக்கது.
சமிபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று நிலையில், அடுத்ததாக வெற்றிமாறனின் உதவி இயக்குநர் படத்தில் ஜி.வி. பிரகாஷ் இணைந்துள்ளார்.
இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக இணைந்துள்ள வர்ஷா பொல்லம்மா, சதுரன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். மேலும், வெற்றிவேல், யானும் தீயவன், பெட்டிக்கடை போன்ற படங்களில் நடித்துள்ளார். சமிபத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பிகில் படத்திலும் கால்பந்து வீரராக நடித்திருக்கிறார்.
மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரியில் படிக்கும் மாணவராக நடிக்கிறார். கல்லூரியில் பயிலும் போது வரும் பிரச்சனைகள் சுவாரசியங்கள் போன்றவற்றை அக்ஷன் மற்றும் காமெடி கலந்து இந்த படத்தை எடுத்து வருவதாக கோலிவுட்டில் பேச்சு அடிபட்டு வருகிறது.