மகாமுனி வெற்றி.. பாராட்டு மழையில் மஹிமா !

மகாமுனி படத்தில் நடித்துள்ள மஹிமாவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது, மகாமுனி படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதால் அனைவரும் தன்னை பாராட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார் நடிகை, மஹிமா நம்பியார்.

அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த சாட்டை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார். அதற்கு பின் சில படங்களில் நடித்து வந்தார். தற்போது ஆர்யா நடிப்பில் வெளிவந்த மகாமுனி படத்தில் முனி கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

”மகாமுனி படம் மிக முக்கியமான படம், எனக்கு கதையெல்லாம் தெரியாது இயக்குனர் சொல்வதை செய்வேன். ஆனால் திரையில் என்னை பார்க்கும்போது எனக்கே பெருமையாக உள்ளது. இப்பொழுது அனைவரும் என்னை பாராட்டும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

மகாமுனி படத்தின் மூலம் தான் நடிப்பு என்றால் என்ன என்பதை புரிந்துக்கொண்டேன். நடிப்பே தெரியாமல் நடிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டேன். ஒரு கதாபாத்திரத்திற்குள் எப்படி தன்னை பொருத்திக்கொள்ளுவது எப்படி கதாபாத்திரத்திற்காக உழைப்பது என்பதை இந்த படம் எனக்கு கற்றுக்கொடுத்தது” என்று மஹிமா கூறியுள்ளார்.

மேலும் இவர் நடிப்பில் சில படங்கள் வெளியாகவுள்ளது, ஜி.வி.பிரகாஷுடன் ஐங்கரன், விக்ரம் பிரபுடன் அசுரகுரு பிறகு இரண்டு புதிய படங்கள் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார், மஹிமா.

More News >>