பாலிவுட் பட டீசர் போல மிரட்டும் விஷாலின் ஆக்ஷன் டீசர்!
சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் படத்தின் டீசர் சற்றுமுன், யூடியூப் பிரீமியரில் வெளியிடப்பட்டுள்ளது.
இரும்புத்திரை, அயோக்யா என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக கொடுத்து வரும் நடிகர் விஷால், அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகி விட்டார். சுந்தர். சி இயக்கத்தில், விஷால், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் படத்தின் டீசர் சற்று முன் மாலை 5 மணிக்கு வெளியானது.
நடிகர் விஷால் இந்த டீசரை வெளியிட்டுள்ளார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இணையான அசத்தல் ஆக்ஷன் காட்சிகளுடன் இந்த ஆக்ஷன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்று வருகிறது.
ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை டீசருக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. விஷால், சுந்தர். சி கூட்டணியில் உருவான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி மீண்டும் விஷால் – சுந்தர்.சி கூட்டணியில் இணைந்துள்ளார்.
கத்திச்சண்டை படத்திற்கு பிறகு விஷாலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் தமன்னா. இவர்களை தவிர இந்த படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு, அகான்ஷா புரி, கபீர் துஹான் சிங், ராம்கி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
விரைவில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.