100% காதல் டிரைலர் ரிலீஸ்!
ஜி.வி. பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள 100% காதல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சந்திரமெளலி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், ஷாலினி பாண்டே, நாசர், தம்பி ராமைய்யா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள 100% காதல் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஷாலினி பாண்டேவுக்கு கிடைத்த தமிழ் படம் 100% காதல் திரைப்படம். ஆனால், படத்தின் மேக்கிங்கில் ஏற்பட்ட குளறுபடிகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது, பட்டி டிக்கரிங் பார்த்து படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு ஆயத்தமாகி உள்ளது.
நாகசைத்தன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 100% லவ் படத்தின் ரீமேக் தான் இந்த படம். தற்போது வெளியாகியுள்ள டிரைலரை பார்த்தால், தெலுங்கு வெர்ஷனை ஃபிரேம் பை ஃபிரேம் எடுத்துள்ளது போலவே தெரிகிறது. ஆனால், படம் எந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கும் என்பது ரிலீசுக்கு பிறகே தெரிய வரும்.