இந்த வருஷம் இல்ல அடுத்த வருஷம் தான் ரியல் பிகில் ஆரம்பம்!
17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பிபா உலககோப்பை கால்பந்து போட்டி, அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது.
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது. அந்த படத்தின் மைய கதை என்னவென்றால், பெண்கள் கால்பந்தாட்டம் தான்.
சினிமாவில் இப்படி இருக்க நிஜமாகவே அடுத்த ஆண்டு பிபா உலககோப்பை பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டி இந்தியாவில் 2020 நவம்பரில் நடைபெற உள்ளது. அப்போது அதுதானே ரியல் பிகில்.
சுரிச் நகரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிபா யு-17 போட்டியை நடத்தும் உரிமையை பெற்ற இந்தியா, அதனை அடுத்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்த அனுமதி பெற்றுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு தரப்படும் முக்கியத்துவம் கால்பந்தாட்டம் உள்ளிட்ட மற்ற விளையாட்டு போட்டிகளுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு அனைவராலும் கூறப்படுவது வழக்கம்.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலககோப்பை கால்பந்தாட்ட போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிங்கபெண்ணாக மாறி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே இந்திய விளையாட்டு ரசிகர்களின் கனவாக இருக்கிறது.