நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி.. மம்தா பானர்ஜி காட்டம்
நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, இன்று(செப்.15) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:
சர்வதேச ஜனநாயக நாளான இன்று, நாட்டின் அரசியல் சட்டத்தின் மாண்புகளை பாதுகாப்பதற்கு மீண்டும் ஒரு முறை நாம் உறுதி எடுத்து கொள்வோம். நமது நாடு இப்போதுள்ள சூப்பர் எமர்ஜென்சி காலத்தில், அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.இவ்வாறு மம்தா கூறியுள்ளார்