கேட் உமனாக மாறிய யாஷிகா ஆனந்த்!
நடிகை யாஷிகா ஆனந்த், தனது சமூக வலைதள பக்கங்களில் கேட் உமன் லுக்கில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
பிக்பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக இருந்து இளைஞர்களை கவர்ந்த யாஷிகா ஆனந்த், துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
பின்னர், அவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம், அவருக்கு நல்ல ஒரு ரீச்சை தமிழ் சினிமாவில் வழங்கியது. அதற்கு பின்னர், பிக்பாஸ் 2வில் போட்டியாளராக நுழைந்து தமிழ் மக்கள் மனதிலும் யாஷிகா இடம்பிடித்தார்.
அண்மையில் அவர் நடிப்பில் வெளியான ஜாம்பி படம் படுதோல்வியை அடைந்த நிலையில், புது பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது கவர்ச்சி உடை புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது அவர், கேட் உமன் போன்ற ஹேர்ஸ்டைல் மற்றும் பிகினி உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தும், முழு புகைப்படத்தையும் போட்டு இருக்கலாமே என்று கமெண்ட் செய்தும் வருகின்றனர்.