பிரதமர் மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பதாக அறிவிப்பு.. இது சிறப்பு என மோடி ட்விட்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் மோடி நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் பங்கேற்பதற்கு மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஐ.நா.சபையின் 74வது கூட்டம் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் போது, வரும் 22 ம் தேதியன்று டெக்ஸாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார். howdyModi என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மோடி உரையாற்றவிருக்கிறார். இதில் 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இப்போதே பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், வரும் 22 ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு அதிபர் டிரம்ப் செல்கிறார். அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் சமுதாய நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்கிறார். இது இருநாடுகளுக்கு இடையே உள்ள உறுதியான உறவை மக்களுக்கு வெளிப்படுத்தும் என்று கூறியுள்ளது.

இதையடுத்து, பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். அதில் அவர், ஹூஸ்டன் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்வது சிறப்பான பரிசாகும். இது இரு நாடுகளின் சிறந்த நட்புறவை எடுத்து காட்டுவதாக அமையும். அவரை அங்குள்ள இந்தியர்களுடன் சேர்ந்து வரவேற்கத் தயாராக உள்ளேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>