சிங்கமா, நரியா ஜெயிக்கப்போவது யாரு? மாஃபியா டீசர் ரிலீஸ்!
அருண்விஜய், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் டீசர் சற்றுமுன் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் வேட்டைக்கார சிங்கமாக அருண் விஜய்யும், தந்திரம் நிறைந்த நரியாக பிரசன்னாவும் எதிரெதிரே அமர்ந்து வசனம் பேசும் விதமாக டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.
மாஃபியா டானாக இருக்கும் பிரசன்னாவை எப்படி போலீஸ்காரரான அருண்விஜய் பிடிக்கிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என்பது டீசரின் மூலமே அறியப்பட்டாலும், திரைக்கதை நேர்த்தியில் கார்த்திக் நரேன் திறமையானவர் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது என்றே சொல்லலாம்.
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். முழு படப்பிடிப்பும் நிறைந்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நிறைவடைந்தததும் மாஃபியா தியேட்டருக்கு வந்து ரசிகர்களை கொள்ளையடிப்பான் என எதிர்பார்க்கப்படுகிறது.