பிரதமர் மோடிக்கு பிறந்த நாள்.. சோனியா, மம்தா வாழ்த்து..
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும், இந்தியாவில் உள்ள பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ட்விட்டரில் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நீண்ட காலம் மகிழ்ச்சியுடனும், நலமுடனும் வாழ வாழ்த்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன. மேலும் நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு சார்பிலேயே பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.