பல்லி சொல்லும் சேதி
பொதுவாக வீடுகளில் காணப்படும் பல்லிகள் எழுப்பும் "டிக் டிக் டிக்" ஒலி குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் உள்ளது...
பலருக்கு அது ஏதோ வரப்போகிற பின்விளைவுகள் குறித்து நமக்கு எதையோ உணர்த்துகிறது என்ற நம்பிக்கை உண்டு... அதன்மூலம் நல்லதும் நடக்கலாம், கெட்டதும் நடக்கலாம்.
அதை பற்றி சுருக்கமாக காண்போம்..
கிழக்கு திசை ராகு கிரகத்தின் சாரம்சத்தை பெற்றிருக்கும் என்பதால், பல்லியானது கிழக்கு திசையிலிருந்து ஒலியெழுப்பினால் எதிர்பாராத ஒரு பயத்தை, கெட்ட செய்தியை இது முன்கூட்டி தெரிவிப்பதாக அர்த்தம்.
இதே கிழக்கு திசையில் அடுத்த வீட்டில் அல்லது அடுத்த மனையில் இருந்து சப்தம் வந்தால் உடனடியாக ஏதோ ஒரு கெடுதல் நடப்பதாக அர்த்தம். குறிப்பாக உடல் நலம் இல்லாத பெரியவர்கள் மரணிப்பார்கள்.
தென்கிழக்கு திசையாக அக்கினி மூலையில் இருந்து கொண்டு பல்லி சப்தமிட்டால், உடனடியாக கலகம் வரும். இந்த நாளில் இருந்து ஒருவாரத்திற்குள் நமது இல்லத்திற்கு மரண செய்தி வரும் என்பதை உணர்த்தும்.
தென்திசை செவ்வாய் கிரகத்தின் சாரம் சத்தை பெறுவதால், அந்த திசையிலிருந்து பல்லி சப்தமிடுமேயானால் இதன் பலன் எதிர்பாராத சுக சவுகரியங்களையும் எதிர்பாராத அதிர்ஷடத்தையும் தெரிவிப்பதாக இருக்கும்.
இதவே தெற்கு திசையில் அடுத்த வீட்டிலோ, அடுத்த மனையிலிருந்தோ சப்தம் வந்தால் எதிர்பாராத தோல்வி, துக்க செய்தி, எதிர்பாராத விரயம் முதலியவைகளை ஏற்படும்,
தென்மேற்கு மூலையிலிருந்து சப்தமெழுப்பினால், அது புதன் கிரகத்தின் சாராம்சம் பொருந்திய திசை என்பதால், இதன் காரணமாக இதன் ஜெனபந்துக்கள் வருகையும், இனஜென்ம பந்துக்கள், நண்பர்களால் நன்மைகளும் ஏற்படும்.
மேற்கு திசையில் இருந்து சப்தம் எழுப்பினால் அது சனி கிரகத்தின் சாராம்சம் பொருந்தியிருக்கும் என்பதால், சஞ்சலமான சோதனைகளும், சங்கடங்களும் ஏற்படும் என்பதற்கான எச்சரிக்கையாகும்.
இதே மேற்கு திசையில் அடுத்த வீடு அல்லது அடுத்த மனையாக இருக்குமானால், உடனடியாக கெடுதல்களும் வந்து சேருவதை எச்சரிப்பதாகும்.
வடதிசையாக வாயு மூலையில் இருந்து ஒலியெழுப்புமாயின் சுபச்செய்தி வரும்.
இப்படியாக பல்லி நம்முடைய இல்லத்தில் சம்பவிக்க இருக்கும் சஸ்பென்ஸ்களை நமக்காக அவ்வப்போது லீக் செய்கிறது.
இவை அனைத்தும் நம் முன்னோர்களின் கனிப்பு தானே தவிர, என்னுடைய ஆராய்ச்சியின் முடிவல்ல.
இனி நமக்கு பல்லியை தேட வேண்டுயது தானே வேலை.