தல 60: சக்சஸ் ஃபார்முலாவை கதையில் சேர்க்க சொன்ன அஜித்!
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல 60 படத்தையும் எச். வினோத் இயக்குகிறார். அவருக்கு அஜித் சில சக்சஸ் டிப்ஸ்களை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என தான் இயக்கிய மூன்று படங்களையும் வெற்றி படமாக்கியவர் இயக்குநர் எச். வினோத். அடுத்து அவர் இயக்கத்தில் தல 60 படம் உருவாக உள்ளது.
இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்.
தல 60 படத்தில் அஜித் ஒரு மாஸான போலீஸ் ஆபிசராக வருகிறார். படம் முழுக்க பயங்கர ராவாக இருப்பது போன்று கதையை ரெடி செய்து அஜித்திடம் கொடுத்துள்ளார்.
கதையை படித்த அஜித், விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களில் பெண்களுக்கான முக்கியத்துவம் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் படத்திற்கான பலமாக இருந்தது என்றும், இந்த ஃபார்முலாவை சேர்த்து கதையில் கொஞ்சம் கரெக்ஷன் பண்ண முடியுமா என கேட்டுள்ளதாகவும், அதற்கு எச். வினோத் ஓகே சொல்லி அதற்கான வேலைகளை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.