பிகில் படத்தின் அடுத்த அப்டேட்!
பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள ரொமாண்டிக் பாடல் லிரிக் வீடியோ தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்க அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகிறது. இந்த படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்துஜா, கதிர், யோகி பாபு, விவேக் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்களான சிங்கப்பெண்ணே பாடலும், வெறித்தனம் பாடலும் வெளியாகி அதன் வெறித்தனத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலான உனக்காக பாடல் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதுபோல தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது.
உனக்காக வாழ நினைக்குறேன் என்ற அருமையான வரிகள் மூலம் பாடல் தொடங்குகிறது. இந்த படத்தின் மெலோடி பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. கணவன் மனைவி உறவை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/IdDaf8Rr33E" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>