சுதந்திர தீயை மூட்டும் சைரா நரசிம்ம ரெட்டி டிரைலர்!
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், ராம் சரண் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்டத்திற்காக போராடிய முதல் இந்திய வீரர் என்ற அடைமொழியுடன் இந்த வரலாறு படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் பாலிவுட் பிதாமகர் அமிதாப் பச்சன், கிச்சா சுதிப், விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் தமன்னா என அடுத்த பாகுபலி போல படம் உருவாகி உள்ளது.
தமிழ் வெளியீட்டு உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் பெற்றுள்ளது. சிரஞ்சீவிக்கு தமிழ் டப்பிங்கை நடிகர் அரவிந்த் சாமி கொடுத்துள்ளார்.
பிரம்மாண்ட காட்சிகள் மற்றும் அதிரவைக்கும் படத்தொகுப்பு பார்வையாளர்களை டிரைலரிலேயே கட்டிப் போடுகிறது. வரும் காந்தி ஜெயந்திக்கு படம் வெளியாகிறது.