ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் தங்கல் நாயகி!

தங்கல் படத்தின் ரியல் நாயகிகளான கீதா போகட் மற்றும் அவரது சகோதரியான வினேஷ் போகத் ஆகியோர், தொடர்ந்து மல்யுத்த போட்டிகளில் கலக்கி வருகின்றனர்.

தற்போது, வினேஷ் போகத் டோக்கியோவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியாவில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் மல்யுத்த சாம்பியன் என்ற சிறப்பினையும் வினேஷ் போகத் பெற்றுள்ளார்.

கஜகஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் 53 கிலோ மல்யுத்த பிரிவில் கலந்து கொண்ட வினேஷ் போகத் க்ரீஸ் நாட்டின் மரியாவை எதிர்கொண்டு பலப்பரீட்சை நடத்தினார். முடிவில் 4-1 என்ற புள்ளி கணக்கில் மரியாவை வீழ்த்தி உலககோப்பை போட்டியில் முதன் முதலாக வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

வெண்கலம் வெல்வதற்கான போட்டிக்கு தகுதி பெறும் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாராவை 8-2 என்ற புள்ளி கணக்கில் வினேஷ் போகத் வீழ்த்தியபோதே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ம் ஆண்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

More News >>