ஜோதிகாவுக்கு சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ்… என்ன தெரியுமா?
ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தால் படத்தின் படப்பிடிப்புக்கு சர்பிரைஸ் விசிட் அளித்துள்ளார் நடிகர் சூர்யா.
திருமணத்திற்கு பிறகு படங்கள் நடிப்பதை நிறுத்திக்கொண்ட ஜோதிகா. 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்டரி கொடுத்தார். அதற்குபின் நாச்சியார், காற்றின் மொழி, செக்கச்சிவந்த வானம், ராட்சசி, ஜாக்பாட் போன்று பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் சூரியாவின் 2டி பிக்சர்ஸ் தயாரிப்பில், பொன்மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்துவருகிறார். ஜெ.ஜெ.பெட்ரிக் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
பொன்மகள் வந்தாள் படத்தின் ஷூட்டிங்கின் போது யாருக்கும் முன்னறிவிப்பு கொடுக்காமல் திடீர் என சர்ப்ரைஸாக அங்கு சென்றுள்ளார், சூரியா. சூர்யாவை பார்த்த ஜோதிகா இன்பதிர்ச்சி அடைந்தார். அங்கு படக்குழுவினரிடம் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.