விடிய விடிய கனமழை.. ஆனால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை!

காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால், சென்னை மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதிகப்படியாக திருவள்ளூரில் 21 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

திருவள்ளூர், செங்குன்றம், சோழாவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் பத்து மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்ததால், முக்கிய சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

காலையிலும் மழை சில இடங்களில் தொடர்ந்து பெய்து வருவதால், இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என மாணவர்கள் ஆவலோடு உற்று நோக்கினர். ஆனால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்களான கீதா லட்சுமி, மகேஷ்வரி மற்றும் பொன்னையா, காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால், இன்று பள்ளிகள் வழக்கம் போல் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

பெற்றோர்கள் பாதுகாப்புடன் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு வந்து சேர்க்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனமழையின் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.

 

More News >>