நைட் மங்கியான ஸ்பைடர் மேன்.. புது டிரைலர் ரிலீஸ்!
அமேஸிங் ஸ்பைடர்மேன் வரிசையில் தற்போது உருவாகியுள்ள புதிய படத்திற்கு நைட் மங்கி என வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளனர். அதன் டிரைலர் வெளியாகி உள்ளது.
பீட்டர் பார்க்கரையும் ஸ்பைடர் மேனையும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் எப்பவுமே பிரிக்க முடியாது. ஒரு சிலந்தி பூச்சி கடித்தவுடன் ஸ்பைடர் மேனாகும் மனிதன் செய்யும் அட்டகாச சாதனைகள் தான் ஸ்பைடர்மேன் படமாக உலகமெங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது.
டோபி மார்குயர் ஸ்பைடர்மேனாக நடித்து மூன்று பாகங்கள் வெற்றியடைந்த நிலையில், டாம் ஹாலண்ட்டை ஸ்பைடர்மேனாக ஆக்கி அழகு பார்த்தது சோனி நிறுவனம்.
அமேசிங் ஸ்பைடர்மேனாக களமிறங்கிய டாம் ஹாலண்ட், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வரையில் ஸ்பைடியாகி கலக்கினார்.
தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஸ்பைடர்மேன் படத்திற்கு நைட் மங்கி என தலைப்பு வைத்துள்ளனர். ஸ்பைடர்மேன் படத்திற்கு மங்கியின் தலைப்பு வைப்பதா என்றும், இந்த தலைப்பில் ஒரு 3 அல்லது 4 பாகங்கள் வெளியிடுவார்கள் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களையும் அள்ளி தெளித்து வருகின்றனர்.
டோபி மார்குயர் நடிப்பில் வெளியான ஸ்பைடர்மேன் 3ம் பாகத்தில் வரும் பிளாக் ஸ்பைடி போல இந்த நைட் மங்கியில் டாம் ஹாலண்ட் உடை அணிந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.