தீபாவளி ரேசில் தைரியமாக களமிறங்கும் தமன்னா!
தீபாவளி பண்டிகை தினத்தன்று தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் படமும் திரைக்கு வருகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி என இரு பெரிய படங்கள் தீபாவளிக்கு பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில், இந்த போட்டியில் தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் திரைப்படமும் இணைகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காமெடி கலந்த ஹாரர் படமாக பெட்ரோமாக்ஸ் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் பல காமெடி நடிகர்கள் தமன்னாவுடன் இணைந்து நடித்துள்ளனர். யோகி பாபு, முனிஷ்காந்த், சத்தியன், காளி வெங்கட் என நகைச்சுவை நடிகர்கள் புடைசூழ உருவாகியுள்ள இந்த பெட்ரோமாக்ஸ் படத்தை அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இயக்கி உள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படங்களுக்கு நடுவே ஒரு ஹீரோயின் செண்ட்ரிக் படம் தைரியமாக வெளிவருவதே பாராட்டுக்குரிய விஷயம் தான்.
அதிலும், காமெடி பேய் படத்திற்கு கோலிவுட்டில் எப்போதுமே ஒரு மார்க்கெட் இருப்பதால், அந்த ரசிகர்களை டார்கெட் செய்து தீபாவளி கலெக்ஷனை அள்ள பெட்ரோமாக்ஸ் படக்குழு முடிவு செய்துள்ளது.
ஆனால், சமீபத்தில் தமன்னா நடிப்பில் தமிழில் வெளியான தேவி 2 மற்றும் ஹிந்தியில் வெளியான காமோஷி படங்கள் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், பெட்ரோமாக்ஸ் தமன்னாவிற்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.