நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா காப்பான்?
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படம் நாளை வெளியாகுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
லைகா தயாரிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் கதை தன்னுடையது என சில வாரங்களுக்கு முன் குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனால், காப்பான் படத்தின் ரிலீசுக்கு எந்த ஒரு தடையும் இல்லை என ரசிகர்கள் உற்சாகமாக நாளை ரிலீசாகும் படத்திற்கு டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தன் சார்பு வாதத்தை சரியாக விசாரிக்காமலே நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளதாக மீண்டும் அவர் மேல் முறையீடு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும், இந்த வழக்கை நீதிபதி மணிக்குமார் தலைமையில் இன்று மாலைக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதால், காப்பான் படத்தின் ரிலீசுக்கு கடைசி நேரத்தில் சிக்கல் வருமா என எதிர்பார்க்கப்படுகிறது.